கேதர்நாத் கோவிலில் காதலனிடம் ‘புரபோஸ்’ செய்த இளம்பெண்- சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!!
வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்கள் அல்லது சுற்றுலா தளங்கள், பூங்காக்களில் இளம்ஜோடியினர் தங்கள் இணையர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி காதலை வெளிப்படுத்தி புரபோஸ் செய்வது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் வீடியோவில், கேதர்நாத் கோவிலில் வைத்து இளம்பெண் ஒருவர் தனது காதலனிடம் ‘புரபோஸ்’ செய்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எல்லா பெரிய கோவில்களிலும் ‘ஸ்மார்ட் போன்கள்’ ஏன் தடை செய்ய வேண்டும்?
என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோவில், இளம்ஜோடி ஒன்று மஞ்சள் நிற ஆடை அணிந்து கோவில் முன்பு வைத்து சாமி தரிசனம் செய்வது போன்றும், பின்னர் அந்த இளம்பெண் தனது காதலன் முன்பு முழங்கால் இட்டு அவரிடம் தனது காதலை முன்மொழிவது போன்றும் காட்சிகள் உள்ளது. இந்த காட்சி வைரலாகி வரும் நிலையில், டுவிட்டர் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர், இதில் தவறாக எதுவும் இல்லை என பதிவிட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் கோவிலில் வைத்து இதுபோன்று செய்வதால் கோவிலின் புனிதம் பாதிக்கப்படுவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.