புங்குடுதீவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வும் , நற்பணி செயற்பாடுகளும்!! (படங்கள்)
க. பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் தோற்றி 3 A சித்திகளை பெற்ற புங்குடுதீவை சேர்ந்த மேரி பவுஸ்ரினா எனும் மாணவியின் உயர்கற்கைக்கு உதவும் நோக்கில் புங்குடுதீவு உலகமையம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் முயற்சியினால் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் (150 , 000) ரூபாய் வழங்கிவைக்கப்பட்டது.
அண்மையில் புங்குடுதீவு குறிச்சுகாடு சந்தியில் அமைந்துள்ள தீவகம் பொது மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் இவ் ஊக்குவிப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது . எமது மண்ணின் மைந்தர்களான திரு. திவ்வியன் சண்முகநாதன் , திரு. சசி சண்முகநாதன், சுரேஷ் செந்தில்நாதன் ஆகியோர் தலா 50000 என்ற அடிப்படையில் மேற்படி நற்காரியத்தினை மேற்கொள்வதற்கு உறுதுணையாக செயற்பட்டிருந்தனர்.
அண்மைக்காலங்களில் யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற இசை நிகழ்வுகளில் அதிகளவான பார்வையாளர்கள் கலந்துகொண்டிருக்கக்கூடிய இசை நிகழ்வாக கருதப்படுகின்ற இந்நிகழ்ச்சியானது புங்குடுதீவின் வரலாற்றில் ஓர் சிறப்பான சம்பவமாகும். அத்தோடு இங்கு எந்தவித கட்டணமும் அறவிடப்படாது சிறு வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையிலும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டிருந்த மாபெரும் இசைநிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக்குழுவினரான கனடா உறவுகளான திரு. சோம சச்சிதானந்தன் , கென் கிருபா, ந.உதயன், கோபாலபிள்ளை தீபன், அகிலன் முத்துக்குமாரசுவாமி, சமூகம் ஊடகம் ஆ. கிருபானந்தன், திவ்வியன் கதிர்காமநாதன், சசி சண்முகநாதன், சுரேஷ் செந்தில்நாதன் மற்றும் சுவிஸ் சுரேஷ் செல்வரட்ணம், புங்குடுதீவு மைந்தர்களான கருணாகரன் நாவலன், கருணாகரன் குணாளன் ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.