தேரரின் காணொளியால் பரபரப்பு !!
ஜப்பானிலுள்ள விஹாரை ஒன்றில் வைத்து இளைஞர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படும் மாகல்கந்தே சுதந்த தேரர் தொடர்பான காணொளி ஒன்றை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது பேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ வெளியானவுடன் ஜப்பானில் வசிக்கும் சில சிங்கள இளைஞர்களால் மாகல்கந்தே சுதந்த தேரர் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து அவர் ஜப்பானிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.