யாழ்- கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இருபதாவது ஆண்டுப் பூர்த்தி விழா!! (PHOTOS)
யாழ்ப்பாணம் – கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இருபதாவது ஆண்டுப் பூர்த்தி விழா இன்றையதினம் இடம்பெற்றது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் கோண்டாவிலில் உள்ள சிவபூமி பாடசாலையில் இன்று திங்கட்கிழமை(03) காலை 9.30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜாவும் சிறப்பு விருந்தினராக வைத்தியகலாநிதி வை.மனோமோகன் தம்பதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,சிவபூமி பாடசாலை அதிபர், சிவபூமி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள்,பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இருபதாவது ஆண்டுப் பூர்த்தி விழா சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
ஆறு திருமுருகனின் வரலாற்றை ஆங்கில மொழியில் எடுத்து கூறும் நூலும் வெளியிடப்பட்டது.
அகில இலங்கை ரீதியில் முதன் நிலைப்பாடசாலையாக“சுபஅபிமானி” விருது பெற்று மிளிரும் சிவபூமி பாடசாலையின் மாணவர்கள் சர்வதேச ரீதியில் விசேட ஒலிம்பிக் போட்டியில் மூன்று தடவை கிறீஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று பதக்கங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.