இ.மி.ச வின் தரவுகள் தவறானவை;ஜானக்க !!
கடந்த பெப்ரவரியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது தவறான தரவுகளின் அடிப்படையில் தான் என்பதை தற்போதைய மின் கட்டணக் குறைப்பு நிரூபித்து விட்டதாக முன்னாள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜானக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வுக்காக இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த சில தரவுகள் பிழையானவை எனவும் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் அதுவும் அதைத்தான் வெளிப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவை, சில அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். இன்று தமது தரவு தவறானது என தாமே ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதனால் தான் இலங்கை மின்சார சபை, முன்மொழிந்த 3% ற்கு பதிலாக 14% மின் கட்டண குறைப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
மின்சார பாவனையாளர்கள் மட்டுமன்றி பல்வேறு அநீதிகளினால் பாதிக்கப்படும் அனைத்து நுகர்வோரின் உரிமைகளையும் பாதுகாப்பதில் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக முன்னாள் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.