கத்தி முனையில் கோடிக்கணக்கில் கொள்ளை !!
பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் கூரிய கத்தியுடன் நுழைந்த சந்தேகநபர்கள் பணிப்பெண்ணை பயமுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.