மாதவிடாய் ஒரு குற்றமல்ல’ – எவரெஸ்ட் உச்சியில் ஏறி உரக்கச் சொன்ன பெண்!!
மாதவிடாயின் போது நேபாளத்தில் இருக்கும் பல பெண்கள் வீட்டை விட்டுக்கு வெளியே இருக்கும் சிறிய குடிசைகளில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
இந்தப் பழக்கத்தை ‘ச்சாவ்படி’ (Chhaupadi) என்று சொல்கிறார்கள்.
இப்படி மாதவிடாயின் போது விலக்கிவைக்கப்படுவதற்கு எதிராக, அந்நாட்டில் பல பெண்கள் தனிப்பட்ட முறையிலும், சமூக அளவிலும் போராடி வந்திருக்கின்றனர்.
ஆனால் சமீபத்தில் ஒரு பெண், இந்தப் போராட்டத்தை இமயம் வரை எடுத்துச் சென்றிருக்கிறார்.
சங்கீதா ரோகாயா, இவ்விஷயத்தைப் பற்றிய விழிப்புணர்வை எற்படுத்துவதற்காக ‘ச்சாவ்படி முறையை ஒழிப்போம்’ என்ற பதாகையுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருக்கிறார்.
சமீபத்திய மலையேற்ற சீசனில் எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருகிறார்.
அவரது கதையை அவரே சொல்கிறார்…