ஓய்வு வயதெல்லை குறித்து அமைச்சரவை பத்திரம் !!
விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது அதிகரித்து வரும் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சின்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சினால் கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் குறித்து கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைக்கும் 17.10.2022 திகதியிடப்பட்ட அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்த்து 176 விசேட வைத்திய நிபுணர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விசேட வைத்தியர் நிபுணர்களின் ஓய்வுபெறும் வயதை 63 ஆக உயர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு, கடந்த 27ஆம் திகதி அறிவித்தார்.