அமெரிக்க தம்பதிகளின் புதிய முயற்சி- சாட்ஜிபிடி தொழில்நுட்பம் மூலம் நடைபெற்ற திருமணம்!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பல துறைகளிலும் விரிவடைந்து வருகிறது. அந்த வகையில் ஓபன்ஏஐ-ன் சாட்ஜிபிடி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் நாம் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதில்களை கொடுக்கும் ஒரு விரிவான மொழி கருவியாகும். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ரீஸ் வீஞ்ச்-டெய்டன் ட்ரூட் ஜோடிக்கு கடந்த வாரம் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்தது.
வழக்கமான திருமணங்களை போல் அல்லாமல், தேவாலயத்தில் அருட் தந்தைக்கு மாறாக சாட்ஜிபிடி உதவியுடன் இயங்கும் ஒரு எந்திரத்தால் இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்திரம் வரவேற்புரையை நிகழ்த்தி திருமண விழாவை நடத்தி விட்டு முடிவில் நிறைவு திருப்பலியுடன் திருமண விழாவை முடித்து வைத்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.