ஃபிரான்ஸ் வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை அனுப்பி வைக்க சொன்ன ட்விட்டர் பயனர் யார்?
ஃபிரான்ஸில் 17 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பயனர் ஒருவரின் ட்விட்டர் பதிவு இந்தியாவில், சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர் என் ஜான் கேம் என்ற சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்து, ஃபிரான்ஸ் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அங்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கூறி ஒரு ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டது.
அதில், “ஃபிரான்ஸ் கலவரம் போன்ற சூழ்நிலையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை இந்தியா அங்கு அனுப்ப வேண்டும், அவர் 24 மணி நேரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்.” என்று குறிப்பிடபட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இதற்கு பதில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ட்விட் கவனம் பெற்றுவருகிறது.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இதற்கு பதில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ட்விட் கவனம் பெற்றுவருகிறது.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில், “உலகின் எந்தப் பகுதியிலும் கலவரங்கள் வெடிக்கும் போதெல்லாம், அராஜகம் பரவி, சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடையும் போதெல்லாம், யோகி மாடல் மூலம் உத்தரப்பிரதேசத்தில் மகாராஜ் ஜி ஏற்படுத்தியுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கை உலகம் தேடுகிறது.” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பேராசிரியர் என் ஜான் கேம், தனது ட்விட்டர் கணக்கில் தன்னை ஒரு மூத்த இதயநோய் நிபுணர் என்றும் ஜெர்மனியில் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யோகி ஆதித்யநாத்தை பாராட்டி அவர் பதவிட்டிருந்த கருத்தும், அதற்கு முதலமைச்சர் அலுவலகம் அளித்த பதிலையும் தொடர்ந்து, ஜான் கேம் என்ற ட்விட்டர் கணக்கு போலியானது என்று ஒருசிலரும், உண்மையான கணக்குதான் என்று மற்றவர்களும் கூறி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் வகையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், `சில போலி கணக்குகள் மூலம் பதிவிடப்படும் ட்விட்கள் குறித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
போலி என்கவுண்டர்களும், சட்டவிரோதமாக புல்டோசர் மூலம் நடவடிக்கை எடுப்பதும், பலவீனமானவர்களை குறிவைப்பதும் மாற்றத்திற்கான கொள்கைகள் அல்ல, அவை ஜனநாயகத்தை அழிப்பது. லக்கிம்பூர், ஹத்ராஸ் போன்ற இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் மூலம் யோகி மாடல் என்றால் என்ன என்பதை நாம் பார்த்திருக்கிறோம்` என குறிப்பிட்டிருக்கிறார்.
செய்தியாளரான அபிஷேக் உபாதியாய் தனது ட்விட்டர் பக்கத்தில் , “உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ஃபிரான்ஸில் வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை அங்கு அனுப்ப வேண்டும், அவர் 24 மணி நேரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவார் என்று பலரும் கூறுகின்றனர். லண்டன் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய பேராசிரியர் என் ஜான் கேம் என்ற புகழ்பெற்ற நபர் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார்.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
ஒருசில ஊடகங்களும் ஐரோப்பாவைச் சேர்ந்த நபரின் ட்விட் என்று குறிப்பிட்டு இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டுள்ளன.
யோகி ஆதித்யநாத்தை ஃபிரான்ஸுக்கு அனுப்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ள ட்விட்டர் கணக்கு நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பவருக்கு சொந்தமானது என உண்மை சரிபார்ப்பாளரான முகமது ஜூபைர் கூறுகிறார்
யார் இந்த பேராசிரியர் ஜான் கேம்?
ட்விட்டரின் புதிய விதிகளின்படி பணம் கட்டுவதன் மூலம் யார் வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிக்கும் ப்ளூ டிக்கை பெற முடியும். இதனால், ப்ளூ டிக்குடன் இருக்கும் என் ஜான் கேம்மின் கணக்கு உண்மையிலேயே பேராசிரியர் ஜான் கேம் என்பவருக்கு சொந்தமான கணக்குதானா என்பதை உறுதிப்படுத்துவது கடினமாகிறது.
இந்நிலையில் யோகி ஆதித்யநாத்தை ஃபிரான்ஸுக்கு அனுப்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ள ட்விட்டர் கணக்கு நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பவருக்கு சொந்தமானது என உண்மை சரிபார்ப்பாளரான முகமது ஜூபைர் கூறுகிறார்.
தனது ஊழியர்களை ஏமாற்றியதற்காக ஹைதராபாத் போலீஸார் மூலம் ஏற்கனவே ஒருமுறை நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் முகமது ஜூபைர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
தனது கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, போலீசார் வெளியிட்ட செய்தி குறித்த ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி, இந்த கைது 2019ஆம் ஆண்டில் நடந்துள்ளது.
அதேநேரத்தில், ஜாகீர் அலி தியாகி என்ற பயனர், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஒருவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘ஐரோப்பிய மருத்துவர் என்று கூறப்படும் நபர் இவர்தான். அவரின் பெயர் நரேந்திர விக்ரமாதித்யா’ என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, மெட்லைஃப் க்ரைஸிஸ் (ரோஹின் ஃபிரான்ஸிஸ்) என்ற பயனர் வெளியிட்டுள்ள ட்வீட்டும் வைரலாகி வருகிறது. மார்ச் 10, 2023ல் இந்த ட்வீட்களை அவர் பதிவிட்டுள்ளார். அதில், “ஜான் கேம் என்று கூறிக்கொள்ளும் ட்விட்டர் கணக்கு பழைய விதிகளின்படி அங்கீகரிக்கப்படவில்லை. புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பணம் செலுத்தியே ப்ளூ டிக் பெறப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சந்தேகத்திற்குரிய ட்விட்டர் கணக்கு லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ இதயவியல் பேராசிரியரான ஜான் கேம் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறது,” என்று பயனர் கூறியிருக்கிறார்.
இந்தப் பெயரை இணையத்தில் தேடியபோது, இங்கிலாந்து செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையின் இணையதளத்தில் பேராசிரியர் ஜான் காமின் சுயவிவரம் கிடைத்தது.
பேராசிரியர் ஜான் கேம் இதயநோய் நிபுணராக உள்ளார். இருப்பினும், இணையதளத்தில் உள்ள அவரது படத்திற்கும் ட்விட்டர் கணக்கில் உள்ள புகைப்படத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.
ஜான் கான் என்ற டிவிட்டர் பயனிரின் புகைப்படம் (வலது) மற்றும் இங்கிலாந்து மருத்துவமனை வலைத்தளத்தில் கிடைத்த புகைப்படம் (இடது)
சர்ச்சைக்குரிய ட்விட்டர் பயனர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் இருக்கும் படங்களையும் பகிர்ந்து, அவை போட்டோஷாப் செய்யப்பட்டவை என்றும் ரோஹின் ஃபிரான்சிஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில செய்தித்தாளான தி இந்து, ரோஹின் ஃபிரான்ஸிஸ் என்ற இந்த பயனரை தொடர்பு கொள்ள முயன்றது.
ரோஹின் ஃபிரான்ஸிஸ் தனது அடையாளத்திற்கான ஆவணமாக சிகாகோவின் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைகழகத்தின் பெல்லோஷிப் சான்றிதழை மட்டுமே பகிர்ந்து கொண்டதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.
பேராசிரியர் என் ஜான் காமின் ட்விட்டர் கணக்கின் முகப்பில் ஒரு புகைப்படம் உள்ளது. புகைப்படத்தில் உள்ள கல்வி நிலையம் ராஜஸ்தானில் 2027ஆம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டது என்றும் ரோஹின் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
ரோஹின் பிரான்சிஸின் இந்த ட்வீட்டில், என் ஜான் காமின் முழுப் பெயர் நரேந்திர ஜான் கேம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பெயரைத் தேடியதில், இங்கிலாந்தில் மூடப்பட்ட பல நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்ததாகவும், அங்கு இயக்குநராக நரேந்திர ஜான் கேம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதில் இரண்டு நிறுவனங்கள் ‘பிரவுன்வால்ட்’ பெயரில் உள்ளன. யூஜின் பிரவுன்வால்ட் நவீன இதய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
இதயவியல் துறையில் நன்கு அறியப்பட்ட ஜான் கேம் மற்றும் யூஜின் பிரவுன்வால்ட் ஆகியோர் உண்மையான பேராசிரியர்கள். அதே நேரத்தில் நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்ற இதயநோய் நிபுணர் 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்றும் அந்த பயனர் குறிப்பிட்டுள்ளார்.
பிரவுன்வால்ட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் அவரது கணவர் மீது ரச்சகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்த பல செய்திகளையும் இணையத்தில் கண்டோம்.
100 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததற்காக டாக்டர் யாதவ் கைது செய்யப்பட்டார், மேலும் 2014 ஆம் ஆண்டில், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த பெயரில் உள்ள ஒரு நபருக்கு ஐந்தாண்டுகளுக்கு பயிற்சி மேற்கொள்ள தடை விதித்தது.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இதற்கிடையே, ஜான் கேம் ட்விட்டர் கணக்கில் இருந்து திங்களன்று ஒரு பதிவு வெளியிட்டப்பது. அதில், என் ஜான் காமுக்கு எதிராக இழிவான உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததாக கூறி உண்மை சரிபார்ப்பாளரான முகமது ஜுபைருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள ஜுபைர், மேலும் பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
சில ஆவணங்களின் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்துள்ள ஜுபைர், இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள ‘பிரவுன்வால்ட் ஹாஸ்பிட்டல்ஸ் பிரைவேட் லிமிடேட்’ என்ற நிறுவனத்தின் இயக்குநராக நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் உள்ளார்.
ஜுபைர் ஏற்கனவே பகிர்ந்திருந்த காவல்துறையின் ஸ்கிரீன் ஷாட் தொடர்பான பதிவிலும் இந்த நிறுவனத்தின் பெயர் உள்ளது.
பிரவுன்வால்ட் லைஃப்கேர் லிமிடெட் என்ற மற்றொரு நிறுவனம் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜுபைர் கூறியுள்ளார். அதன் இயக்குர் திவ்யா ராவத். ஆனால் 2018 ஆம் ஆண்டில், இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தின் புதிய இயக்குநராக நரேந்திர யாதவ் நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில், இயக்குநரின் பெயர் நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்பதிலிருந்து ‘நரேந்திர ஜான் கேம்’ என மாற்றப்பட்டது. அதே ஆண்டில் நிறுவனத்தின் பெயரும் ‘ஜான் கேம் லைஃப்கேர் லிமிடெட்’ என மாற்றப்பட்டது.
இந்த நிறுவனம் இறுதியாக 2020 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் மற்றும் பிரவுன்வால்ட் ஹெல்த்கேர் லிமிடெட் தொடர்பாக வெளியிடப்பட்ட சில கட்டுரைகளின் ஸ்கிரீன் ஷாட்களையும் ஜுபைர் பகிர்ந்துள்ளார், அதில் நரேந்திர விக்ரமாதித்யா யாதவின் புகைப்படங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.