வழக்குகள் தாமதமாகாமல் தடுக்க நாடாளுமன்ற முன்மொழிவு!!
நீதிவான் நீதிமன்றங்களில் ஆரம்பித்து அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென பாராளுமன்றத்தில் முன்மொழிவதாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் சாகர காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்குகள் தாமதப்படுத்தப்படுவதால் முதலீட்டு வாய்ப்புகள் கூட இழக்கப்படும் நிலை காணப்படுவதாகவும், முதலீட்டு ஊக்குவிப்பு மூலமே தேவையான பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீடுகள் மிகக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாகவும், உள்ளூர் முதலீட்டாளர்கள் கூட இந்நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை மூடிவிட்டு வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.