;
Athirady Tamil News

ராஜஸ்தான் கோஷ்டி பூசலை தீர்க்க காங்கிரஸ் மேலிடம் தீவிரம்!!

0

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அங்கு இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறது. இருவருமே கட்சிக்கு முக்கியத்துவம் என்று கூறி மேலிடம் ஏற்கனவே சமாதானப்படுத்தியது. ஆனாலும் அவர்கள் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் நடைபயணம் மேற்கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை தீர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

அதற்குள் கோஷ்டி பூசலை தீர்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. இரு அணிகளாக செயல்பட்டால் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இதனால் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரை மீண்டும் சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டுள்ளது. இருவரையும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை சந்திக்கிறார். அப்போது ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் அவர் அசோக் கெலாட்டையும், சச்சின் பைலட்டையும் சமாதானப்படுத்துவார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டும் என்பதில் சச்சின் பைலட் பிடிவாதமாக இருக்கிறார். அவருக்கு மாநில தலைவர் பதவி கிடைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.