சோளத்துக்கு ரூ.20 ஆயிரம்!!
சிறிய அளவிலான விவசாய தொழில் முனைவோர் பங்கேற்பு திட்டத்தின் கீழ், எதிர்வரும் பெரும்போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தை பண்படுத்துவதற்காக ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அம்பாறை, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு மாத்திரமே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அத்துடன், சோளச் செய்கைக்கு தேவையான கிருமிநாசினிகள், உரங்கள் என்பனவும் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது
சிறிய அளவிலான விவசாய தொழில் முனைவோர் பங்கேற்பு திட்டத்தின் கீழ், இந்த 5 மாவட்டங்களிலும் 22 ஆயிரம் ஏக்கரில் சோளச் செய்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.