கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ !!
ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியான கனேடியர்கள் மளிகை தள்ளுபடி பெறுவது இன்று தொடங்குகிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கனடாவில் ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியானவர்கள், மளிகைப் பொருட்களின் விலை உயர்வுக்கு உதவ இன்று சிறப்புக் கட்டணத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கனேடியர்களுக்கு உணவு பணவீக்கத்தை சமாளிக்க மளிகைப் பொருட்கள் தள்ளுபடி உதவும் என்று பட்ஜெட்டில் உறுதி அளிக்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 11 மில்லியன் கனேடியர்கள் வழக்கமான ஜிஎஸ்டி கிரெடிட் கட்டணத்துடன் கூடுதல் பணத்தைப் பெறுவார்கள் என்று கனடா வருவாய் முகமை கூறுகிறது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘மளிகைப் பொருட்கள் தள்ளுபடி கட்டணம் இன்று தொடங்குகிறது. இரண்டு குழந்தைகளுடன் தகுதியுள்ள தம்பதிகள் கூடுதல் 467 டொலர்கள் வரையும், ஒற்றைக் குழந்தை உடைய கனேடியர்கள் கூடுதல் 234 டொலர்கள் வரையும், மூத்தவர்கள் சராசரியாக 225 டொலர்கள் வரையும் பயன்பெறுவார்கள்’ என தனது பதிவில் கூறியுள்ளார்.