25 கோடி பெறுமதியான லொட்டரி சீட்டை மதுக்கடையில் தொலைத்த மெக்கானிக் – பின்னர் நடந்த சம்பவம் !!
மதுபான நிலையத்திற்கு சென்ற மெக்கானிக் ஒருவர் 25 கோடி பெறுமதியான லொட்டரி சீட்டை அங்கு தொலைத்த நிலையில் அவருக்கு லொட்டரியில் பணம் கிடைத்துள்ளதாக தகவல் வந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாது திக்கு முக்காடிப்போனார்.
பின்னர் நடந்த சம்பவம் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்தது.சம்பவம் தொடர்பில் ‘டெய்லி மெயில்’ தெரிவித்துள்ளதாவது,
மாசசூசெட்ஸில் வசிக்கும் போல் லிட்டில் ஒரு மெக்கானிக் மற்றும் டீசல் என்ஜின்கள் தயாரிப்பில் வேலை செய்கிறார். ஜனவரியில், அவர் ஒரு லொட்டரி சீட்டை வாங்கினார், ஆனால் அதை தவறுதலாக மதுக்கடையில் விட்டுவிட்டார். எங்கேயாவது விழுந்திருக்கலாம் என்று நினைத்த அவர் பின்னர் மறந்து போனார்.
ஆனால் மாலையில், லொட்டரி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அவருக்கு 3 மில்லியன் டொலர் ஜாக்பொட் அடித்திருப்பதாக சொல்லப்பட்டது. அதாவது சுமார் 25 கோடி. இதைக் கேட்டதும் அவரின் கண்கள் இருண்டன.
லொட்டரி நிறுவனத்திடம் எதுவும் சொல்லாமல், உடனடியாக மதுக்கடைக்கு ஓடினார் போல் லிட்டில். அங்கு சென்று காசாளரிடம் விசாரித்தபோது, அவர் அதுபற்றி தெரியாது என்றதும், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் .
ஆனால் காசாளர் ஒரு தந்திரம் செய்தார். லொட்டரி சீட்டை எடுத்துக் கொண்டு பணத்தை எடுக்க வந்தார். ஆனால் சீட்டு கிழிந்து எரிந்த நிலையில் இருந்ததை பார்த்த லொட்டரி அதிகாரிகள் உடனடியாக சந்தேகமடைந்தனர். காசாளர் நூன்ஸ் ஏதேதோ சொல்லி தன்னை தற்காத்துக் கொண்டார்.
ஆனால் அதிகாரிகள் அதற்கு சம்மதிக்காமல் அந்த நபரை காணொளி எடுத்தனர். பின்னர், உண்மையான வெற்றியாளர் வந்ததும், அவர் கைது செய்யப்பட்டார். உண்மையான வெற்றியாளரான மெக்கானிக்குக்கு அந்த பரிசுத் தொகை வழங்கப்பட்டது.