சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி- அவசர கட்சி கூட்டத்திற்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு!!
மகாராஷ்டிர மாநில அரசில் திடீர் திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (சரத் பவார் அண்ணன் மகன்) 39 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சராக பதவி ஏற்றனர்.
மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியில் அஜித் பவார் நுழைந்தது ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, முதல்வர் இன்று அவரது அனைத்து திட்டங்களையும் ரத்து செய்துவிட்டு தனது இல்லத்தில் அவசர கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார் என்பதை சுட்டிக்காட்டி எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.