;
Athirady Tamil News

நம்ப முடிகிறதா…! ஐஸ்லாந்தில் ஒரே நாளில் 1600 நில அதிர்வுகள்!!

0

ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது. 1600 நில அதிர்வுகள் அளவிடப்பட்டுள்ள நிலையில், தலைநகர் பகுதியில் மிகப்பெரிய அளவில் உணரப்பட்டதாகவும், அது தொடரவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் நான்கு அதிர்வுகள் 4 ரிக்டர் அளவிற்கு மேல் இருந்ததாகவும், இது லேசான நிலநடுக்கும் எனவும் கருதப்படுகிறது. இருந்தாலும் விமானம் பறப்பதற்கு ஆரஞ்சு எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, என்றாலும் ஒன்றிரண்டு நாட்களில் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் கடந்த 2021 மற்றும் 2022-ல் ரெய்க்ஜாவிக்கில் இருநது 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஃபக்ராடால்ஸ்ஃப்ஜால் மலை அருகே எரிமலை வெடிப்பு உண்டானது. இந்த நில அதிர்வுகள் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.