தெற்கு லெபனானில் குண்டு வெடிப்பு!!
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நீடித்து வருகின்றது.
இந்நிலையில் சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலின் எல்லைகள் சந்திக்கும் தெற்கு லெபனானின் சர்ச்சைக்குரிய பகுதியில் இரண்டு முறை குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன. லெபானனில் இருந்து ராக்கெட்டுக்கள் ஏவப்பட்டதா அல்லது குண்டு வெடித்ததா என்பது குறித்த உடனடி விவரங்கள் தெரியவில்லை.