மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மூட்டு அறுவை சிகிச்சை!!
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் மம்தா பானர்ஜிக்கு இடது கால் மூட்டு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு நேற்று மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் மற்றும் முதல்வர் சக்கர நாற்காலியில் வீடு திரும்பினார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,” முதல்வர் மம்தா பானர்ஜி இப்போது நன்றாக இருக்கிறார். ஆனால், அவர் வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டும். அடுத்தகட்ட சிகிச்சைக்காக இன்னும் சில நாட்களில் அழைப்போம்” என்றார்.