;
Athirady Tamil News

கடந்த ஏழு நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் புதிதாக பிறந்த 04 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்!!

0

கடந்த ஏழு நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் புதிதாக பிறந்த 04 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது மருத்துவ அலட்சியத்தாலா அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலா இடம்பெற்றது என சந்தேகங்களை எழும்பியுள்ளது.

உயிரிழந்த இரண்டு சிசுக்களின் பெற்றோர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் எழுத்து மூலமான முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதை தொடர்ந்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது.

இதற்கிடையில்,”இறப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, இந்தச் சம்பவங்கள் குறித்து மருத்துவ விசாரணையை ஆரம்பித்துள்ளதாக” சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த சில நாட்களுக்குள் அமைச்சு வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க, இந்தச் சம்பவம் பற்றி அறிந்திருந்தாலும், உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய தெளிவான காரணங்களை அவர்கள் இன்னும் பெறவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையில், மகப்பேறு புள்ளிவிபரங்களின்படி, கிளிநொச்சி மருத்துவமனையில், 2022 இல் 15 பிறந்த குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன.

2023 ஜனவரி முதல் ஜூன் வரை 10 பிறந்த குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.