முல்லைத்தீவு மாவட்டத்துக்கு புதிய அரசாங்க அதிபர்!!
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அருளானந்தம் உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய க.விமலநாதன் ஓய்வு பெற்றார்.
அந்த இடத்திற்கு நிலவிய வெற்றிடத்திற்காக உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.