;
Athirady Tamil News

மேற்கு வங்காளம்: பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!!

0

மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே வன்முறை தலைவிரித்தாடியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தங்களது வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மத்திய பாதுகாப்புப்படை பாதுகாப்புடன் வேட்புமனு தாக்கல், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். உயர்நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது. இருந்தாலும் வன்முறை, கொலைவெறி தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று 3 தொண்டர்கள் உயிரிழந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேவையானபோது மத்தியப்படை எங்கே போனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இதையெல்லாம் தாண்டி பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 73,887 இடங்களுக்கு 2.06 லட்சம் வேட்பாளர்களர் களம் இறங்கியுள்ளனர். 22 மாவட்டங்களில் உள்ள 63,229 கிராம பஞ்சாயத்து, 9,730 பஞ்சாயத்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

மழை பெய்து கொண்டிருக்கும் நிலையிலும், மக்கள் காலை 6 மணியில் இருந்து நீண்ட வரிசையில் வாக்களிக்க திரண்டு வந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 928 மாவட்ட கவுன்சிலர், 9,419 பஞ்சாயத்து கவுன்சிலர், 61,591 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. பா.ஜதனா 897 மாவட்டர் கவுன்சிலர், 7032 கவுன்சிலர், 38475 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. 70 ஆயிரம் மாநில போலீஸ் உடன் 600 கம்பெனி மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.