;
Athirady Tamil News

இவ் வருடத்தில் சிறந்த நிலையை எட்டிய இலங்கை ரூபாவின் பெறுமதி!!

0

இந்த வருடத்தின் இது வரையான காலப் பகுதியில் அனைத்து பிரதான நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சிறப்பாக நிலையினை எட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, இவ் வருடத்தில் ஜூலை 7 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஜப்பானிய யென்னுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 27.9 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.8 வீதத்தால் அதிகரித்துள்ளது.

மேலும், யூரோவுக்கு எதிராக 15.3 சதவீதமும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக 11.5 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அதேநேரம் இந்திய ரூபாய்க்கு எதிராக 17.7 சதவீதமும் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.