;
Athirady Tamil News

விலங்குகள் கொள்வனவினால் 17 மில்லியன் ரூபாய் நட்டமாம்!!

0

2018 முதல் 2020 வரை வெளிநாட்டுப் பறவைகளை கொள்வனவு செய்யும் போது ஒரு சில பறவைகளுக்கு மதிப்பிடப்பட்ட தொகை 50000 ரூபவாக இருந்த போதிலும், சுமார் 1.5 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) புலப்பட்டது.

அதற்கமைய மதிப்பிடப்பட்ட தொகையை விட, கொள்வனவு செய்யப்பட விலை 3000% வீதம் அதிகளவானது எனத் தெரியவந்தது.

இந்தக் கொள்வனவில், விநியோகஸ்தரினால் 32 வகையான பறவைகளை விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக அதிக விலையில் பறவைகளைக் கொள்வனவு செய்யவேண்டி ஏற்பட்டதால் சுமார் 17 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அண்மையில் கூடிய போது இந்த விடயங்கள் புலப்பட்டன.

ரிதியகம சபாரி பூங்கா மற்றும் பின்னவலை வாகொல்ல புதிய மிருகக்காட்சிசாலை இதுவரை உள்வாங்கப்படாததால், சட்டத்தை விரைவாக திருத்துமாறும் இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.