;
Athirady Tamil News

மணீஷ் சிசோடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்கிறது- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!!

0

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை நேற்று தெரிவித்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்வதாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.52 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பொய் சொல்கிறது. சிசோடியாவுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.