இராட்சத முட்டையிட்ட அதிசய கோழி – எங்கு தெரியுமா…!
கனடிய மாகாணங்களில் ஒன்றான மனிடோபாவில் இரண்டு வயது நிரம்பிய கோழி 202 கிராம் முட்டை இட்டு சாதனை படைத்துள்ளது.
ஓங்பேங்கின் தென்கிழக்கே அமைந்துள்ள பண்ணைத் தோட்டத்தில் ஹென்ரிட்டா எனும் கோழியே இவ்வாறு சாதனை படைத்துள்ளது.
சாதாரணமாக ஒரு கோழி முட்டை 50 கிராம் முதல் 70 கிராம் வரையிலான எடையுடன் தான் இருக்கும்.
ஆனால் இம்முட்டை உள்ளங்கையில் அடக்கத்தக்க ஒரு மாம்பழம் அளவில் இருப்பதாக கோழி உரிமையாளர் பார்டெல் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இக்கோழியின் முட்டைகள் வழமையாகவே 75 கிராம் எடையுடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கனடாவின் லீமிங்டன், ஓன்ட் விவசாயப் பண்ணைகளைச் சேர்ந்த விவசாயிகள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“இங்கு வளர்க்கப்படும் கோழிகள் எப்போதாவது அதிசயமாக 180 கிராம் எடையுள்ள முட்டைகளை இடுவது வழக்கம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஓன்ட், லீமிங்டனில் உள்ள விவசாயிகள், 175 கிராம் எடையுள்ள, ஆரஞ்சுப் பழத்தின் அளவுள்ளதொரு முட்டையைக் கண்டுபிடித்தனர்.
அதே போல 2017 ஆம் ஆண்டு ஓன்ட், எக்கோ பேயில் இடப்பட்ட மற்றொரு முட்டையானது 180 கிராம் எடை கொண்டதாக இருந்தது.
உலகிலேயே அதிக எடை கொண்ட கோழி முட்டையென கின்னஸ் சாதனை படைத்த முட்டையென்றால் அது 1956 ஆம் ஆண்டில் நியூஜெர்ஸியில் இடப்பட்ட 454 கிராம் கோழி முட்டையே” என்றனர்.
இந்த சாதனை முட்டையை என்ன செய்வதாக இருக்கிறீர்கள் எனும் கேள்விக்கு பார்டெல், நான் இதை உணவாக மாற்றலாம் என்றிருக்கிறேன் எனவும், குஞ்சுகளை அடைகாக்க முயற்சித்தால் அவை உயிர்வாழ வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.