அமெரிக்க நகர்வுக்கு எதிர்ப்பு : 13 விமானங்களை பறக்கவிட்ட சீனா !!
அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் யெல்லன் தாய்வானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, சீனா அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தாய்வானுடன் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது.
இந்நிலையில், சீனா இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தாய்வான் எல்லைக்கு 13 விமானங்கள், 6 கப்பல்களை அனுப்பியுள்ளது.
தாய்வான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சீனா வேறெந்த நாடும் தாய்வானுடன் வர்த்தகம், தூதரக உறவுகளை மேற்கொள்வது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் இச்செயற்பாட்டிற்கு பதிலடியாக, தாய்வான் பாதுகாப்பு அமைச்சு சீனாவின் நடவடிக்கைகளை தாம் கவனித்து வருவதாகவும், பதில் தாக்குதலுக்கு ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.