500-வது நாளாக தொடர்ந்து நடக்கும் உக்ரைன் போர்!!
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நேற்று 500-வது நாளை எட்டியது. இந்த போரால் உக்ரைனில் மட்டும் இதுவரை 9,083 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் 43,000 வீரர்களும் உக்ரைன் ராணுவத்தில் 17,500 வீரர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போர் நேற்று 500-வது நாளை எட்டியது. உக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.