புங்குடுதீவு வெற்றிக்கிண்ணம் 2023!! (படங்கள் இணைப்பு)
விருந்தோம்பலுக்கு பெயர்போன கிராமம் புங்குடுதீவு என்பர் … அதற்கமைய
புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான புங்குடுதீவு வெற்றிக்கிண்ணத்தொடரில் கலந்துகொண்ட மூளாய் விக்ரோறி அணி , சண்டிலிப்பாய் இந்து மகளிர் அணி , நயினாதீவு , வேலணை ஆகிய நான்கு அணிகளுக்கும் உணவு மற்றும் இதர தேவைகளுக்காக தலா பத்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 40000 ரூபாய் வழங்கிவைக்கப்பட்டது.
புங்குடுதீவு மண்ணின் மைந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்களின் நிதியுதவியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.