இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வந்தார் !!
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இன்று உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்தார்.
ஜூலை 20 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதுடில்லி விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை குவாத்ரா மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி விக்ரமசிங்க 2022 இல் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்கிறார், இந்த மாத இறுதியில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் தொடர்பில் கலந்துரையாடுவதே இலங்கை விஜயத்தின் பிரதான நோக்கம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய வௌிவிவகார செயலாளர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.