ஜெலென்ஸ்கியின் தலைவேண்டும் – வாக்னர் படைத்தலைவருக்கு உத்தரவிட்ட புடின் !!
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தொடர்பில் ரஷ்யஅதிபர் விளாடிமிர் புடின் வாக்னர் வாடகைபடை தலைவருக்கு உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியை முடித்துக் கொள்ள போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
ஆனால், மிக இரகசியமாக அவர் ரஷ்யாவுக்கு வரவழைக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது விளாடிமிர் புடின் ஆதரவுடன் எவ்ஜெனி பிரிகோஜின் மிகக் கொடூரமான நடவடிக்கையில் களமிறங்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவருகிறது.
அதில், முதன்மையானதாக, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் தலையை ரஷ்யாவுக்கு கொண்டுவருவதே என கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த ஜூன் 29ம் திகதி அதிபர் புடின் வாக்னர் வாடகைபடை தலைவர் பிரிகோஜினுடன் இரகசிய சந்திப்பை முன்னெடுத்தார் என்பதை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
வாக்னர் வாடகை படை தலைவர் மற்றும் புடினின் இரகசிய சந்திப்பு தொடர்பில் பிரான்ஸ் பத்திரிகையே முதன்முதலில் தகவல் வெளியிட்டுள்ளது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், சுமார் 3 மணி நேரம் நீண்ட இந்த இரகசிய சந்திப்பில், எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 35 உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டதை உறுதி செய்துள்ளார்.
இந்த சந்திப்பின் போதே, வாக்னர் படை தலைவருக்கு, ஜெலென்ஸ்கியின் தலையை கொண்டுவர புடின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.