;
Athirady Tamil News

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் பவித்ரோற்சவம் 13-ந்தேதி தொடங்குகிறது!!

0

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடக்கிறது. அதையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை அங்குரார்ப்பணம், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை யாக சாலை பூஜை, பவித்ர பிரதிஷ்டை, சயனாதிவாசம் நடக்கிறது.

14-ந்தேதி யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள், பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 15-ந்தேதி யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் மற்றும் பவித்ர பூர்ணாஹுதி நடக்கிறது. இதோடு பவித்ரோற்சவம் நிறைவடைகிறது. மேற்கண்ட 3 நாட்கள் காலை நேரத்தில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை நேரத்தில் திருவீதி உற்சவமும் நடக்கிறது. பவித்ரோற்சவ விவரம் அச்சிடப்பட்ட புத்தகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி நேற்று தேவஸ்தான நிர்வாகக் கட்டிடத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தை கோவில் துணை அதிகாரி நாகரத்னா மற்றும் அர்ச்சகர் ஆனந்தகுமார் தீட்சிதர், கோவில் ஆய்வாளர் சலபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.