;
Athirady Tamil News

தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு – நிர்மலா சீதாராமன்!!

0

தலைநகர் டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 50-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும். புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்கப்படும். செயற்கை ஜரிகைக்கு 12% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்ட நிலையில் இனி 5% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட பருத்திக்கு பழைய ஜி.எஸ்.டி. வரி பாக்கி ரத்து செய்யப்படும். தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 18%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.