சந்திரபாபு நாயுடு எழுதி கொடுத்ததை வெட்கமின்றி படிக்கிறார் பவன் கல்யாண்- ரோஜா தாக்கு!!
ஜனசேனா கட்சி தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக பேசியுள்ளார். இதற்கு மாநில மகளிர் ஆணையம் மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:- பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு பவன் கல்யாண் மன்னிப்பு கேட்க வேண்டும். பெண் கடத்தலில் தெலுங்கானா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை பவன் கல்யாண் விமர்சனம் செய்து பேச முடியுமா? அவ்வாறு பேசினால் அவர் ஐதராபாத்தில் வசிக்க முடியுமா.
முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தாரையும் விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டி எப்போதாவது பவன் கல்யாண் குடும்ப உறுப்பினர்களை விமர்சித்து பேசி இருக்கிறாரா. வரும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தோல்வி அடையும் என பவன் கல்யாணுக்கு எந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுப்பதை பவன் கல்யாண் வெட்கமின்றி படிக்கிறார். இவர்களால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.