ஜப்பானின் அடுத்தக்கட்ட நகர்வு – இறக்குமதிகளை தடை செய்யும் ஹொங்காங் !!
புகுசிமா அணு ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, அனைத்துலக அணுசக்தி அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், ஜப்பானின் இச்செயற்பாட்டிற்கு உலக அளவில் பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது.
பாதிப்புக்கள்
இதனால் பசிபிக் கடல், சுற்றுசூழல், கடல் வளம் என்பன பாதிப்பதோடு மீன்கள் பலியாக கூடிய நிலையும் ஏற்படும் என உலக நாடுகள் எச்சரித்துள்ளன.
அத்துடன், கடலில் ரேடியேஷன் ஏற்படும் என்று பசிபிக் கடலை நம்பி இருக்கும் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.
இறக்குமதி தடை
அத்துடன் கடந்த ஆண்டு ஜப்பானிடமிருந்து 500 மில்லியன் டொலருக்கு அதிகமான கடலுணவை வாங்கிய ஹொங்காங் இனி கடலுணவு இறக்குமதியை தடை செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புகுசிமா அணு உலை கழிவுகள் இந்த மாதத்தில் இருந்து பசிபிக் கடலில் திறந்துவிட வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.