புதிய வரிகளை அமுலாக்க இலங்கை மீது அழுத்தம் | IMF வழங்கிய விளக்கம்!!
இலங்கையில் புதிய வரிகளை அமுலாக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக டிஜிட்டல் சேவைகள் வரிகளை அமுலாக்கவும், பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒழுங்கமைப்புகள் சர்வதேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
எனினும் தற்போதைய இலங்கைக்கான வேலைத்திட்டத்தில் அவ்வாறான யோசனைகள் குறித்து எந்தவிடயமும் கலந்துரையாடப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.