குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – சுகாதார அதிகாரிகள் வலியுறுத்து!!
2019 ஆம் ஆண்டு சரம்ப எனப்படும் தட்டம்மை நோய் ஒழிக்கப்பட்ட போதிலும், நாட்டில் மீண்டும் தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதிவாகியுள்ள நோயாளர்கள் தட்டம்மை (சரம்ப ) தடுப்பூசி போடப்படாதவர்கள் எனவும், 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையிலும் உலகிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் பற்றாக்குறையாக காணப்படுவதாகவும் தொற்றுநோயியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியிருந்தார்.
அறிவியல்பூர்வமற்ற காரணங்களால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பெற்றோர் நடவடிக்கை எடுக்காதது பெரும் பிரச்சினையாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த தடுப்பூசிகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் சிறுவர்கள் மேலும் பல நோய்களுக்கு பலியாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக வைத்தியர் சமித்த கினிகே தெரிவிக்கின்றார்.
சரம்ப எனும் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவதால் இந்நாட்டில் குழந்தைகளுக்கு 09 மாதங்களில் மற்றும் 03 வருடங்களில் இந்த தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.