ரஷ்யாவுக்கு பலத்த அடி..! 20 இற்கும் மேற்பட்ட வான்கலங்கள், ஏவுகணைகள் தாக்கி அழிப்பு !!
உக்ரைன் தலைநகர் கியேவ் வை இலக்குவைத்து ஆளில்லா விமானங்கள் மற்றும் குரூஸ் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
ரஷ்யா அனுப்பிய 20 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களையும் இரண்டு குரூஸ் ரக ஏவுகணைகளையும் வான் பாதுகாப்பு கட்டமைப்பு மூலம் தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான யுத்தமானது 500 நாட்களை கடந்து பயணிக்கும் நிலையில், இதுவரை இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மேற்குலக நாடுகளின் இராணுவ உதவிகளுடன் ரஷ்யாவிற்கு எதிரான பதில் தாக்குதல்களை உக்ரைன் மேற்கொண்டுவருகின்ற போதிலும் எதிர்பார்த்த வெற்றிகளை பெறுவதில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.
எனினும் பஹ்மூத் நகரில் முன்னேற்றங்களை கண்டுள்ளதாகவும் தமது நிலைகளைப் பலப்படுத்திவருவதாகவும் உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் Hanna Maliar கூறியுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் தலைநகர் கியேவ் மீது பல்வேறு திசைகளில் இருந்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.