;
Athirady Tamil News

22 வருடங்களுக்கு பின் கனடாவில் அதிகரித்த வட்டி வீதம் !!

0

கனேடிய வங்கி (Bank of Canada) நேற்று(12) தனது வட்டி வீதத்தை 5% ஆக உயர்த்தியுள்ளது.

சுமார் 22 வருடகால இடைவெளிக்குப் பின்னர் இந்த வட்டிவீத அளவு மீண்டும் எட்டப்பட்டுள்ளதாக கனேடிய வங்கியின் (Bank of Canada) ஆளுநர் டிஃப் மக்லம் கூறியுள்ளார்.

“இந்த வட்டிவீத அதிகரிப்பானது கனடாவின் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வங்கியின் ஜூலை மாத நிதிக்கொள்கை அறிக்கையின் படி உலகப் பொருளாதாரம் இந்த ஆண்டு சுமார் 2.8% ஆகவும், 2024 இல் 2.4% ஆகவும், அதைத் தொடர்ந்து 2025 இல் 2.7% ஆகவும் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் கனடாவில் நிலவிய பொருளாதார தளம்பல்களை நிவர்த்தி செய்யும் முகமாகவும் விலைப்பட்டியல்களில் ஸ்திரத்தன்மையையும் பேணும் முகமாகவும் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கனேடிய வங்கி (Bank of Canada) தகவல் வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.