இன்னொரு உலக போரின் களமாக தாய்வான் – தாய்வானை சுற்றி வளைத்த சீன போர் கப்பல்கள் !!
கடந்த இரண்டு நாட்களாக சீனாவின் போர் விமானங்கள், தாய்வானின் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து வந்த நிலையில், சீன இராணுவம் 38 போர் விமானங்களையும், 9 கடற்படை கப்பல்களையும் தாய்வானை சுற்றி நிறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜீலை மாதத்தில் தாய்வான் பாதுகாப்பு பயிற்சிகளில் ஈடுப்படுவதோடு, அந்நிய படையெடுப்புக்கு எதிராகவும், வான்வெளி தாக்குதலை முறியடிக்கவும் ஹான் குவாங் பயிற்சிகளில் ஈடுப்படுவதுண்டு.
அத்தகைய பயிற்சிகளில் ஈடுப்படுவதை சீனா விரும்புவது கிடையாது.
ஒவ்வொரு தடவையும் பயிற்சி இடம்பெறுகையில் சீனா அத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வானுக்கு முழு உரிமை கோரும் சீனா ஒருபுறம் உக்ரைன் போரையும் மறுப்புறம் தாய்வானின் செயற்பாடுகள் குறித்தும் அவதானம் செலுத்தி வருகின்றது.
அத்துடன், தாய்வானுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவும் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், தாய்வானுடனான அமெரிக்காவின் நகர்வுகளை சீனா விரும்புவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விடயம் குறித்து உலக அரசியல் ஆய்வாளர்கள் இன்னொரு உலகப்போர் ஏற்பட்டால், தாய்வான்தான் களமாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.