இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம்: பிரதமர் மோடி தகவல்!!
இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் சபை தலைவர் ஆகியோரை சந்தித்தார்.
மேலும், புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வெற்றிகரமான பணபரிமாற்ற சேவை UPI-ஐ இனிமேல் பிரான்சில பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்தியா- பிரான்ஸ் UPI பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். பிரான்சின் ஈபிள் டவரில் இருந்து இந்த முறை தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா செல்லும் மக்கள் கையில் பணத்துடன் செல்ல வேண்டாம். UPI பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். இந்தியாவின் UPI பல வங்கி கணக்குகளை சிங்கிள் மொபைல் அப்ளிகேசன் மூலம் எளிதாக கையளாமுடியும். 2016-ம் ஆணடு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையை தொடங்கியது.
தற்போது அசுர வளர்ச்சி அடைந்து, பொதுமக்கள் ஐந்து ரூபாய் முதல 10 ரூபாய் என டீ அருந்துவதற்குக் கூட UPI பயன்படுத்தி வருகிறாரக்ள். கடந்த 2022-ல் என்.பி.சி.ஐ. பிரான்ஸ் உடன் வேகம் மற்றும் பாதுகாப்பு ஆன்லைன் பணபரிவர்த்தனை சிஸ்டம் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்கு லைரா எனப் பெயரிட்டிருந்தது. இந்த வருடம் சிங்கப்பூர் PayNow உடன் பயனர்கள் நாடு கடந்த பரிவர்த்தனைக்கு அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், பூடான், நேபாளத்தில் UPI முறை நடைமுறையில் உள்ளது.