நாளாந்தம் உணவின்றி தவிப்பவர்கள் எத்தனை கோடி தெரியுமா -ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!
உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் அதாவது 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
கொரோனாவுக்கு பின்னர் உலகம் முழுவதும் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 12 கோடி அதிகரித்துள்ளது. பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 61 கோடியாக இருந்த நிலையில், தற்போது 73 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளில் உணவு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை குறைந்தாலும், மேற்கு ஆசியா, கரீபியன் மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.