பாம்புகளுக்கு பண்ணை – வியக்கவைக்கும் நாடு !!
பாம்பென்றால் இந்த உலகத்தில் எவருக்குத்தான் பயம் இருக்க முடியாது.அதனால்தான் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள்.
இவ்வாறு இந்த படையும் நடுங்கும் பாம்புகளுக்கு ஒரு தோட்டம் உண்டென்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் அப்படி ஒரு தோட்டத்தில் 400 இற்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த தோட்டத்தில் உள்ள மரங்கள் எந்த விதமான பழங்களையோ, காய்களையோ தருவதில்லை. மாறாக அவற்றின் கிளைகளில் பாம்புகள் மட்டுமே வாழ்கின்றன.
வியட்நாம் நாட்டில் Trại rần Đồng Tâm என்ற பண்ணை தோட்டத்தில் தான் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த பாம்பு பண்ணையில் பாம்புகளின் விஷத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதனுடன், பாம்புகள் கடித்தால் அந்த விஷத்தை குறைக்க ஆன்டிடோக்களும் தயாரிக்கப்படுகின்றன.
டோங் டாம் பாம்புப் பண்ணைக்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்த பாம்பு பண்ணை ஆராய்ச்சி நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது.
12 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணை தோட்டத்தில் பல வகையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 பேர் பாம்பு கடித்து சிகிச்சை பெற இந்த பண்ணைக்கு வருகிறார்கள். ஆண்டிடோஸ் மருந்துக்காக இங்கு தினமும் ஆராய்ச்சி நடக்கிறது.