சுகாதாரத்துறை பிரச்சினை: ஜனாதிபதி கலந்துரையாடல் !!
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஊசிகளின் தரம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள், சுகாதார சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்கமைய, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க திறைசேரியின் பிரதிநிதியொருவர் அடங்கிய குழுவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய நேற்று விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.
மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படாதிருத்தல், மருந்துகள் தொடர்பிலான வெளிப்படைத்தன்மை ஆகிய விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.