;
Athirady Tamil News

இலங்கையின் மீன்பிடி அமைச்சரால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை – சிவஞானம் சிறீதரன்!!

0

யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளது. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார் ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை இந்திய இழுவைப்படகளை கட்டுப்படுத்த நாங்கள் கூட்டாக இந்தியாவில் போய் பேசுவோம் என்று மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானாந்திற்கு பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பதிலளித்துள்ளார்.

நெடுந்தீவு பிரதேசத்துக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (14) பகல் 9.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் சட்டவிரோத தொழில்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள கடல்வளம் இந்திய இழுவைப்படகுகளாலும் உள்ளூர் இழுவை படகுகளாலும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து தமது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தனர்.

இதன்போது, பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவிற்குமிடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டு குறித்த நேரம் அமைதியின்மை நிலவியது.

நெடுந்தீவு கடலில் நாளாந்தம் 400 முதல் 500 உள்ளூர் மற்றும் இந்திய இழுவைப்படகுகள் இவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கின்றன. ஆனால் நெடுந்தீவு பிரதேசத்தை சூழ பத்து வரையான கடற்படை முகாம்கள் உள்ளது. இவ்வாறு இருக்கின்ற கடல் படையாலும் கடற்தொழில் அமைச்சராலும் இதனை தடுக்க முடியவில்லை. இந்திய இழுவைப்படகளை கட்டுப்படுத்த நாங்கள் கூட்டாக இந்தியாவில் போய் பேசுவோம் என்று மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம். நெடுந்தீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அந்த மக்கள் கருத்துக்களை தெரிவிக்க இடமளிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்த அவர்,

இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் இந்தியாவில் போய் பேசுவோம் என்று எங்கும் நாங்கள் சொல்லவில்லை மக்களிடம் தவறான கருத்துக்களை கருத்துக்களை கூறி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.

யாழ்ப்பாணத்தில் நாங்கள் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினோம். அப்படி எந்தவிதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. உள்ளூர் படகுகளை தடுக்க வேண்டிய பொறுப்பு கடற்படைக்கு உள்ளது.

1991 ஆம் ஆண்டு அமைச்சர் இங்கு வரும் போது பொலிஸ் இருக்கவில்லை. கடற்படை இருக்கவில்லை என்று அவரே சொன்னார். ஆனால், இப்போது கடைப்படை இருக்கின்றது பொலிஸ் இருக்கின்றது சகல பாதுகாப்புகளும் இருக்கின்றது அமைச்சராக இருக்கின்றார் இவ்வாறு இருக்கின்ற நிலைமையில் தான் இந்த மக்களினுடைய வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது.

இதனை தடுப்பதற்கான முடிவை யார் எடுப்பது கடற்படையா? அல்லது இளைஞர்களா? என்ற கேள்வியையும் எழுப்பியதுடன், நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளது. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார். ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய இழுவைப்படகளை கட்டுப்படுத்த நாங்கள் கூட்டாக இந்தியாவில் போய் பேசுவோம் என்று மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானாந்திற்கு பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பதிலளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.