மிக விரைவில் சந்தைக்கு அறிமுகமாகும் ஜப்பானின் புதிய பழவகை !!
ஜப்பானின் ஹொக்கைடோவின் விவசாயிகள் புதிய பழத்தை உருவாக்கியுள்ளனர்.
வட்ட வடிவானதாக இருக்கும் இந்தப் பழம், முலாம்பழம் போல இனிப்புச் சுவை உடையதாகவும், எலுமிச்சை போல சற்று புளிப்ப்புச் சுவை உடையதாகவும் இருப்பதனால் இது தற்போது “எலுமிச்சை முலாம்பழம் (Lemon melon)” என்று அழைக்கப்படுகிறது.
பேரிக்காய் போல மிருதுவாக வளர ஆரம்பிக்கின்ற இந்தப் பழமானது பழுக்கும் போது மிகவும் மென்மையாக மாறுகின்றது.
இந்த புதிய கலப்பின பழமானது ஹொக்கைடோவில் ஐந்து விவசாயிகளால் குறைந்த அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
சன் ப்ளவர்ஸ் என்ற ஜப்பானிய தோட்டக்கலை நிறுவனமே இந்தப்பழத்தினை உருவாக்கியுள்ளது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தனித்துவமான ஒரு வகை முலாம்பழத்தின் விதைகளில் இருந்தே இந்த பயிர் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த உற்பத்தியாளர்கள் இதன் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக ஏறக்குறைய 05 ஆண்டுகள் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
தனித்துவமான முறையில் எலுமிச்சைப் பழம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்ற இந்த எலுமிச்சை முலாம்பழம் எண்ணற்ற சாகுபடி முறைகள் மற்றும் அறுவடைகளின் விளைவாகும்.
அதுமாத்திரமல்லாமல் இவ்வாண்டு தான் இந்த பழம் முதல் முறையாக விற்பனைக்காக சந்தை விஜயம் மேற்கொள்ள இருக்கிறது என்பதும் ஓர் சிறப்பம்சமாகும்.
இந்த வருடம் சுமார் 3,800 எலுமிச்சை முலாம்பழங்கள் சன்டோரி நிறுவனத்தால் பயிரிடத் தீர்மானித்துள்ளது.
இவை இவ்வாண்டின் ஒகஸ்ட் மாத இறுதியில் சப்போரோ பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் என எதிர்பார்க்க்கப்படுகிறது.
ஒவ்வொரு பழமும் தலா 3,220 யென்களுக்கு ($22) விற்பனை செய்யப்படவுள்ளன.
வெள்ளை ஸ்ட்ரோபெரிகள், சதுர வடிவ வத்தகைப்பழம், டெகோபன் சிட்ரஸ், மாண்டரின் மற்றும் ஆரஞ்சுகளின் கலப்பினங்கள், ரூபி ரோமன் திராட்சை மற்றும் மியாசாகி மாம்பழங்கள் போன்ற ஆடம்பர பழங்கள் நிறைந்த ஜப்பானின் சந்தையில் இப்போது எலுமிச்சை முலாம்பழமும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெப்பமான கோடை காலங்களில் புத்துணர்ச்சியூட்டக்கூடிய இனிப்புச்சுவையுடைய அமிலத்தன்மையான எலுமிச்சை முலாம்பழம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.