மெக்சிக்கோவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !!
அமெரிக்காவின் மெக்சிக்கோவில் நேற்று(14) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து ஜேர்மனி புவியறிவியல் ஆய்வுமையம் தெரிவிக்கையில்
”மெக்சிக்கோவில் சிபாாஸ் கடலோரப் பகுதியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
புவித்தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் போது ”நெருப்புவளையம்” என்றழைக்கப்படும் பகுதியில் மெக்சிக்கோ அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.