சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க வெள்ளிக்கிழமை (14) இலங்கைக்கான இந்தியா, ஜப்பான் ஆகிய உயர்ஸ்தானிகர்களை சந்தித்துள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தானிகர் கோபால் பங்லே மற்றும் ஜப்பான் உயர்ஸ்தானிகர் மிசுகோசி ஹிதேகீ ஆகியோரை அவர்களது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்து சப்ரகமுவ மாகாணத்தின் எதிகால அபிவிருத்தி விடயம் குறித்து கலந்துரையுள்ளார். இதன்போது இலங்கைக்கான ஜப்பான் உதவி உயர்ஸ்தானிகர் கட்சுகீ கொடாரோவும் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று (16) கைதுசெய்துள்ளனர்.
மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில், மாணவி தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழு பொலிஸாரிடம் வினாவியபோது, தாம் அதிபரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், நாளை திங்கட்கிழமை (17) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அதிபரை முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இச்சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.