;
Athirady Tamil News

பெண் கல்விக்காக குரல் கொடுக்கும் ஆப்கன் சிறுமி!!

0

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சி அமைத்ததில் இருந்து பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளிக்கு செல்ல வேண்டும் என தனது தந்தையிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் கல்வியின் அவசியத்தை சிறுமி தைரியமாக சுட்டிக்காட்டுவதை காண முடிகிறது. மேலும் அந்த சிறுமி தனது தந்தையிடம், என்னை ஏன் பள்ளிக்கு விடமாட்டேன் என கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த தந்தை ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி என்பதால் உனது சகோதரனை மட்டுமே பள்ளியில் சேர்க்க முடியும் என விளக்குகிறார். உடனே அந்த சிறுமி தனது தந்தையிடம், சண்டை மற்றும் அழிவு ஆகிய 2 விஷயங்களுமே எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது.

ஆண்கள் தான் சண்டை மூலம் அழிவை ஏற்படுத்துகிறார்கள். பெண்கள் எந்த அழிவையும் ஏற்படுத்தவில்லை என கூறுவதோடு பெண்கள் பள்ளிக்கு செல்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறார். அதோடு நான் எதிர்காலத்தில் ஒரு டாக்டராகவோ, என்ஜினீயராகவோ அல்லது ஆசிரியராகவோ ஆக வேண்டும் எனவும் தனது விருப்பத்தை கூறுகிறார். இதைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை தனது மகளின் கல்விக்கு முழு ஆதரவை தருவதாகவும், அவளை பள்ளியில் சேர்ப்பதாகவும் உறுதி அளிக்கிறார். வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் சிறுமியின் தைரியத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.