நாடாளுமன்றத்தில் நேரடியாக மோதிய எம்.பிக்கள் – கொசோவாவில் தொடரும் அமைதியின்மை !!
கொசோவா நாடாளுமன்றத்தில் ஆளும் – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக மோதிய சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
அவையில் பேசிக்கொண்டிருந்த பிரதமர் அல்பின் குர்தி(Albin Kurti)மீது உறுப்பினர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய சம்பவத்தை அடுத்து இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரலில் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து வடக்கு கொசோவாவில் அல்பேனிய இன மேயர்கள் பதவியேற்றதில் இருந்து அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலை “கூடுதல் சுயாட்சிக்கான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு” கோரி சேர்பியர்கள் புறக்கணித்திருந்தனர்.
கொசோவாவின் மக்கள் தொகையில், 90 சத வீதம் அல்பேனிய இனத்தவர்களும் 5 சத வீதம் சேர்பியர்களும் உள்ளனர்.
வடக்கு கொசோவாவில் நிலவும் அமைதியின்மை குறித்து மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்கள் நிலவி வந்த நிலையில், இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.